Sunday, 21 September 2014
வல்வில் ராமன்
வல்வில் ராமன்
பல்லவி
அனந்தசயன ராமனை கேசவனை
புள்ளம் பூதங்குடியில் மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வனங்களில் திரிந்து களைத்த ராகவனை
பறவையரசனுக்கு மோட்சமளித் தவனை
சரணம்
தனிக்கோயில் கொண்ட தாமரையாள் போற்றும்
தினகர குலத்துதித்த கோதண்ட ராமனை
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனை
அனைவரும் பணிந்தேத்தும் வல்வில் ராமனை
***************************
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றாதிருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்
மின்னு சோதி நவ மணியும்
வேயின் முத்தும் சாமரமும்
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும ்
புள்ளம்பூதங்குட ிதானே,
புள்ளம்பூதங்குட ி பெருமான் மீது கலியன் பொழிந்த அமுதம்,
ஆழ்வார் திருவடிகளே சரணம்
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றாதிருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்
மின்னு சோதி நவ மணியும்
வேயின் முத்தும் சாமரமும்
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும
புள்ளம்பூதங்குட
புள்ளம்பூதங்குட
ஆழ்வார் திருவடிகளே சரணம்
*******************************
ஸ்ரீ
ஸ்ரீ
பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.
இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?
அதற்கு சிவபெருமான் சொன்னது:
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே
’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.
குறையில்லாத கோவிந்தன்
குறையில்லாத கோவிந்தன்
பல்லவி
எனக்கொரு குறையில்லை கோவிந்தா
உனது திருவடி சரணடைந்த பின்னே
அனுபல்லவி
மனம் முழுதும் நீயே நிறைந்திருக்கின்றாய்
தினமுமுன் நாமமே தொழுதேன் கேசவா
சரணம்
வினதையின் மகனை வாகனமாய்க்கொண்டவனே
அனந்தனின் மீதுறங்கும் பதுமனாபனே
வனங்கள் நிறைந்த திருவேங்கடம் தன்னில்
மனம் குளிரக் காட்சி தரும் ஏழுமலையானே
Saturday, 20 September 2014
தாயும் சேயும் கோவிந்தனே
தாயும் சேயும் கோவிந்தனே
பல்லவி
நீயின்றி நானில்லையே கோவிந்தா
நானின்றி நீயில்லையே என்றும்
அனுபல்லவி
தாயின்றி சேயுண்டோ சொல்வாய்
மாயனே கேசவா மதுசூதனனே
சரணம்
நீயாகவே வந்தெனுள்ளம் புகுந்தாய்
தாயாகித் தந்தையுமாய் நீயாண்டுகொண்டாய்
சேயென்னைக் கனிவோடுன் மடிமீது தாங்கி
கோயில் கொண்டுள்ளத்தில் நீயே யமர்ந்தாய்
**********************************
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.
(Thirumazhisai Azhwar)
O Lord Narayana! You may grace me today, or tomorrow, or some time later, but your grace is definitely coming.
I cannot be without you, Nor can you be without me.
I cannot be without you, Nor can you be without me.
பாலவிநாயகன்
பாலவிநாயகன்
பல்லவி
பட்டாடையுடுத்திய பாலவிநாயகனை
மட்டவிழ் மலர் தூவி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
எட்டெழுத்து நாயகன் கேசவன் மருகனை
வட்ட நிலவின் பிறையை சூடிய கரிமுகனை
சரணம்
சிட்டரைக் காக்கவும் துட்டரை மாய்க்கவும்
திட்டமிடும் ஐங்கரனை ஆனை முகத்தோனை
இட்டசித்தி கணபதியை இடர்நீக்கும் தேவனை
கெட்டலையும் மனக்குரங்கை அடக்கிட வேண்டுமென
தத்துவ கணபதி
தத்துவ கணபதி
பல்லவி
வித்தகர் போற்றும் தத்துவப் பொருளை
விக்னவினாயகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
மத்தள வயிற்றானை கேசவன் மருகனை
அமுத குடமுடைய ஐந்து கரத்தானை
சரணம்
மன யானை தனையடக்க அங்குசமும் பக்தர்களின்
எதிரிகளை கட்டப் பாசக்கயிறுமேந்தும்
ஒற்றைக்கொம்பனை பாரதமெழுதிய
கரிமுகனை மோதகக் கையனை கணபதியை
விநாயகருக்கு தும்பிக்கையுடன்
Subscribe to:
Posts (Atom)


