பரிபாலித்தருள்வாய்…..
பல்லவி
பரிபாலித்தருள்வாய் ஶ்ரீநரசிம்மா
அரியுருவான அழகிய கேசவனே
அனுபல்லவி
திரிவிக்கிரமனே தீரவினை தீர்ப்பவனே
மரித்தலும் பிறத்தலும் இல்லா நிலை தருபவனே
சரணம்
சரணகமலங்களை சரணடைந்தேன்
அரனயனமரர் முனிவர்கள் பணியும்
தரணியை நவகிரகங்களைக் காப்பவனே
பரவாசுதேவனே பாண்டவர் நேசனே
.