ஸ்ரீகோபால விம்சதி(6).....!!!
வ்ரஜ யோஷி
தபாங்க வேதநீயம்
மதுரா பாக்ய மநந்ய
போக்ய மீடே |
வஸுதேவ வதூ
ஸ்தநந்தயம் தத்
கிமபி ப்ரம்ஹ கிசோர
பாவ த்ருச்யம் ||
ஸ்வாமி தேசிகன் 🔹ஸ்ரீகோபால விம்சதி(6)
வடமதுரையின் கண் வசித்து வரும் மக்கள் செய்த பெரும் பாக்கியத்தால் அந்நகரிலே வந்து அவதரித்தவனும் , ஆயர் மங்கை யர்களின் கடைக்கண் நோக்கிற்கு ஈடுபட்டு மனைகள் தோறும் விரும்பி ஒடினவனும், இவ்வள வென்று கூற வொண்ணாத அந்தமில் இன்பத்தைப் பலருக்குத்தர வல்லவனும், தேவகீ தேவியின் பாலை இன்பமாய் உண்டவனும், குழந்தைகளின் தன்மையைப் போலவே எவ்விதங்களிலும் நடித்துக் காட்டுகின்றவனும், முக்கரணங்களுக்கும் கிட்டாதவனுமான தத்துவ ஸ்வரூபியான வேதாந்த விழுப்பொருளாம் கண்ணபிரானைத் துதிக்கின்றேன்.
கண்ணனைத் துதித்திடுவாய்....
பல்லவி
கண்ணனைத் துதித்திடுவாய் மனமே (நீல)
வண்ணனைத் துதித்திடுவாய்
அனுபல்லவி
தண்மதி முகத்தோனை தாமரைப் பதத்தோனை
பண்ணிசைத்து குழலால் மனங்களை மயக்கிடும்
பல்லவி
புண்ணியம் செய்தவர் வாழும் வடமதுரை
மண்ணில் அவதரித்த ஆயர் குல திலகன்
கண்ணிய குலமகள் தேவகியின் பாலை
உண்டு மகிழ்ந்த மறை போற்றும் மாயன்
No comments:
Post a Comment