Monday, 24 September 2018

திருவேங்கடம்தனில்....








வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே .




                       திருவேங்கடம்தனில்....


                                           பல்லவி

                      திருவேங்கடம்தனில் எழுந்தருளிக் காட்சி தரும்
                      கேசவனை நரசிங்க மூர்த்தியைப் பணிந்தேன்

                                        அனுபல்லவி

                       பெரும் பிணி பவக்கடல் கடந்திட எனக்கு
                       அருள் தர வேண்டுமென அவனிடம் வேண்டி

                                                சரணம்

                       அருமறைகள் போற்றும் திருமலைவாசனுக்கு
                       சிறு தூசி அகிலமாம் நீரனைத்தும் ஒரு துளியாம்
                       நெருப்பனைத்தும் ஒரு பொறியாம் ஆகாயம்
                       பெருவெளியோ விரற்கிடையே அடக்கமாம்

Thursday, 20 September 2018

துதித்தேன்....







            துதித்தேன்....


                பல்லவி

    துதித்தேன்  உனதிரு  கமலபதம்தனை
    துதிக்கையனே நீ எனக்கருள்வாய்


               அனுபல்லவி

    அதிசயாமான  ஆனை முகத்தோனே
    மதியணி ந்த வனே  கேசவன் மருகனே


                     சரணம்

     கதிரவன் ஒளியையும் மிஞ்சும் ஒளி யுடையவனே
     விதியையும் வெல்லும் மதியளிப்பவனே
     இதிகாச வேத புராணங்கள்  போற்றும்
      நிதியே  இடர் நீக்கும்  மனித்வீப கணபதியே

Tuesday, 18 September 2018

கண்ணனைத் துதித்திடுவாய்....




ஸ்ரீகோபால விம்சதி(6).....!!!

வ்ரஜ யோஷி
தபாங்க வேதநீயம்
மதுரா பாக்ய மநந்ய
போக்ய மீடே |

வஸுதேவ வதூ
ஸ்தநந்தயம் தத்
கிமபி ப்ரம்ஹ கிசோர
பாவ த்ருச்யம் ||

ஸ்வாமி தேசிகன் 🔹ஸ்ரீகோபால விம்சதி(6)

வடமதுரையின் கண் வசித்து வரும் மக்கள் செய்த பெரும் பாக்கியத்தால் அந்நகரிலே வந்து அவதரித்தவனும் , ஆயர் மங்கை யர்களின் கடைக்கண் நோக்கிற்கு ஈடுபட்டு மனைகள் தோறும் விரும்பி ஒடினவனும், இவ்வள வென்று கூற வொண்ணாத அந்தமில் இன்பத்தைப் பலருக்குத்தர வல்லவனும், தேவகீ தேவியின் பாலை இன்பமாய் உண்டவனும், குழந்தைகளின் தன்மையைப் போலவே எவ்விதங்களிலும் நடித்துக் காட்டுகின்றவனும், முக்கரணங்களுக்கும் கிட்டாதவனுமான தத்துவ ஸ்வரூபியான வேதாந்த விழுப்பொருளாம் கண்ணபிரானைத் துதிக்கின்றேன்.

                          கண்ணனைத் துதித்திடுவாய்....


                                      பல்லவி

                         கண்ணனைத் துதித்திடுவாய் மனமே (நீல)
                         வண்ணனைத் துதித்திடுவாய்

                                      அனுபல்லவி

                         தண்மதி முகத்தோனை தாமரைப் பதத்தோனை
                         பண்ணிசைத்து குழலால் மனங்களை மயக்கிடும்

                                             பல்லவி

                         புண்ணியம் செய்தவர் வாழும் வடமதுரை
                         மண்ணில் அவதரித்த ஆயர் குல திலகன்
                         கண்ணிய குலமகள் தேவகியின் பாலை
                         உண்டு மகிழ்ந்த மறை போற்றும் மாயன்