இடைவிடாது.......
பல்லவி
இடைவிடாது ராம நாமம் சொல்லுவோம்
அடைக்கலமவனே என்பதறிந்து
அனுபல்லவி
கிடைத்திடுமனைத்து நன்மையும் இன்பமும்
தடைகள் விலகிடும் பவபயம் நீங்கிடும்
சரணம்
படைநடத்தி அரக்கன் சிரம் கொய்தவன் நாமம்
விடைவாகனனும் அழைத்திடும் நாமம்
மடந்தையின் மானம் காத்தவன் நாமம்
இடையர் குலத்துதித்த கேசவன் நாமம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம்//
No comments:
Post a Comment