கதி நீயேயென்றுன்......
பல்லவி
கதி நீயேயென்றுன் பதமலர் பணிந்தேன்
அதிலாவண்ய ரகுகுல ராமா
அனுபல்லவி
உதிக்கும் கதிரவனின் ஒளியை விடவும்
அதிகம் தேசுடைய அழகிய கேசவனே
சரணம்
மிதிலாபுரிமகள் சீதையை மணந்தவனே
ரதிமதனும் மயங்கும் வடிவுடையவனே
துதித்திடுமடியார் துயர் துடைப்பவனே
எதிர்த்த ராவணனின் கதை முடித்தவனே