ஶ்ரீராமனுனையே......
பல்லவி
ஶ்ரீராமனுனையே தினம் துதித்தேனே
பாரமலிருந்தால் பொறுப்பேனோ நானே
அனுபல்லவி
தீராவினை தீர்க்கும் கோதண்டராமனே
ஓராயிரம் நாமமுடைய கேசவனே
சரணம்
ஆராவமுதனாய்க் குடந்தையில் கிடந்திடும்
சாரங்கபாணியே ரகுகுல நாயகனே
நாராயணனே நான்மறைகள் போற்றும்
பாற்கடல் வாசனே பரமதயாளனே
No comments:
Post a Comment