அனுமனுக்கிணையாக..........
பல்லவி
அனுமனுக்கிணையாக பக்தி செய்யும் நிலையை
எனக்களித்திடுவாய் ஶ்ரீ ராமா
அனுபல்லவி
மனுவம்சம்தனில் அவதரித்த கேசவனே
தினமுமுன் மலர்ப் பதம் நீங்காதிருந்து
சரணம்
கனவிலும் நினைவிலும் எங்குமெப்போதும்
அனவரதமுமுன் நாமமே துதித்திடும்
மனம் பெறவே உனை வேண்டுகின்றேன்
தினகர குலத்தோனே தீனசரண்யனே
No comments:
Post a Comment