ஆனந்தம் தரும்…..
பல்லவி
ஆனந்தம் தரும் உலகநாயகனே
ஜானகிராமனே உனைத் துதித்தேன்
அனுபல்லவி
வானும் புவியுமளந்த தாடாளனே
கானகம் சென்று தந்தைசொல் காத்தவனே
சரணம்
தானந்தமில்லாத தேனே இன்னமுதே
ஈனமான பொருளில் ஈடுபாடில்லாதவனே
ஊனம் களைந்தென் மன இருள் நீக்கும்
தீனசரண்யனே தினகரகுலத்தோனே
தானமும் தவமும் நன்னெறியறிவும்
நானென்றும் பெற்றிட நல்லருள் தருபவனே
பானுவும் சந்திரனும் கண்களாய் விளங்கும்
ஞான சூரியனே நான்மறைப் பொருளே
மீனுருவாய்த்தோன்றி உலகை மீட்டவனே
மானினைத்தேடியலைந்த மாதவனே
வனிதையின் சாபம் தீர்த்த ராகவனே
கனி தந்த சபரிக்கு மோட்சமளித்தவனே
No comments:
Post a Comment