எல்லாமும் நீயே.......
பல்லவி
எல்லாமும் நீயே கல்யாண ராமா
நல்லருள் வேண்டியே உன்னடி பணிந்தேன்
அனுபல்லவி
கல்லைக் காரிகையாய் செய்த கேசவனே
புல்லை ஆயுதமாய் எரிந்த ராகவனே
சரணம்
சொல்லுக்கடங்காத பேரழகுடையவனே
வில்லை வளைத்தொடித்து ஜானகியை மணந்தவனே
நல்லடியார் நலம் பேணும் கருணாகரனே
வல்லரக்கர் குலமழித்த கோதண்டராமனே
அல்லலிடர் களையும் அரவிந்த பதத்தோனே
சொல்லாலுனைப் பாடி அனுதினம் துதித்தேன்
வல்லவர்க்கும் வல்லவனே வாலியை வென்றவனே
தில்லை ஈசனின் மனங்கவர் நேசனே.
No comments:
Post a Comment