வழியொன்று.........
பல்லவி
வழியொன்று நீ சொல்வாய் கேசவா
பழிபாவமில்லாத நிலையொன்று நானெய்த
அனுபல்லவி
இழிவான செயல்களில் ஈடுபடாவண்ணம்
செழுங்குணத்தோருடன் நானென்றும் சேர்ந்திட
சரணம்
விழித்தும் பசித்தும் தனித்துமிருந்து
மொழி நல்லது பேசும் ஞானியருடன் சேர்ந்து
அழியா புகழோடு பெருவாழ்வு வாழவும்
எழில்மிகு திருவரங்கம் தனில் விளங்குமரங்கனே
No comments:
Post a Comment