கோவிந்த கோவிந்த.......
பல்லவி
கோவிந்த கோவிந்த கோவிந்த என்று
நாவிலவன் நாமம் கூறிப் பழகு
அனுபல்லவி
பூவிலமர்ந்திருக்கும் திருமகள் நேசன்
கூவியழைப்பவர்க்கு அருள் தரும் கேசவன்
சரணம்
ஆவினங்கள் மேய்க்கும் ஆயர்குலபாலன்
தேவகி மைந்தன் தீனசரண்யன்
தேவரும் முனிவரும் இந்திரனும் நாரதரும்
யாவரும் துதித்திடும் ஶ்ரீமன் நாராயணன்
No comments:
Post a Comment