திருவென்னும்.......
பல்லவி
திருவென்னும் பெயராளை பெருந்தேவித் தாயாரை
காஞ்சி திருத்தலத்தில் மனமாரப் பணிந்தேன்
துரிதம்
நாரதர் நான்முகன் ஆதிசேடனும்
கஜேந்திரனுடன் ப்ருகுவும் போற்றும்
அனுபல்லவி
கருநீலவண்ணன் தேவாதிராஜன்
பெருமையுடன் கொண்டாடும் மகாலக்ஷ்மியை
சரணம்
நீங்காத செல்வமும் பாங்கான கல்வியும்
ஓங்கும் புகழும் தீங்கின்றியளித்திடும்
செங்கண்மால் கேசவன் மனம் கவரும் நங்கையை
தங்கநிறத்தாளை செங்கமலவல்லியை
தாளம்: க.சாபு