கோவர்த்தனன்
பல்லவி
அன்று உலகளந்த கேசவனே மணிவண்ணா
உன்றன் திருவடியே கதியென்று சரணடைந்தோம்
அனுபல்லவி
சென்றிலங்கை நகர் வென்ற ஶ்ரீதரனே ரகுராமா
சென்னை மாநகர் காக்க வந்தின்று துணைபுரிவாய்
சரணம்
கன்று பசுவுடனே உனதடியாரனைவருமே
நின்று பெய்யும் மழையில் அவதியுறும் நிலை மாற
குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
இன்று எமக்கிரங்கி இங்கெழுந்தருள்வாயே
No comments:
Post a Comment