பூரி ஜகந்நாதன்
பல்லவி
ஜகம்புகழும் பூரி ஜகந்நாதனை
அகம் மகிழக் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நகம் சிதைந்த காலுடன் நின்ற என்னை
முகம் மலர வரவேற்று அருளளித்த
சரணம்
சுகசனகதியரும் நாரதரும் நான்முகனும்
இகபரந்தநிலுள நரர்சுரருமிந்திரரும்
உடன்பிறந்த பலராமன் சுபத்திரையும்
உடநிருந்து போற்றும் சென்னகேசவனை
No comments:
Post a Comment