Friday, 22 August 2025

கற்பனைக்கெட்டாத…..

 


      

                                   கற்பனைக்கெட்டாத…..


                                                 பல்லவி

                               கற்பனைக்கெட்டாத அழகுடைய

                               கற்பக விநாயகனை தினம் துதித்தேன்

                                              அனுபல்லவி

                               சிற்பரன்  சிவன் மகனைக் கேசவன் மருகனை

                               மற்பொருள் திரள் புய  ஆனைமுகத்தோனை               

                                                 சரணம்                                

                              சொற்களால் வர்ணிக்க இயலாத வடிவுடைய

                              அற்புத உருவம் கொண்ட மகாகணபதியை

                               பற்பல கருமங்கள் விகற்பமின்றி நடைபெற 

                              விற்பன்னர் வேதியர்  பணிந்தேத்தும்


                             

 

                              




Monday, 18 August 2025

பரிந்தருள் புரிவாய்…..

 

                  பரிந்தருள் புரிவாய்…..


                             பல்லவி

               பரிந்தருள் புரிவாய் தாயே பராசக்தி

                அரியயன் அரன்பணி கேசவன் சோதரி

                           அனுபல்லவி

                 எரிதழலேந்தும் ஈசன் பங்கிலுறை

                 கரிய நிறத்தவளே சங்கரி கௌரி

                                 சரணம்

                  விரிந்து பரந்த மாய உலகில்

                  சரியும் தவறும் நெறியறியாமல்

                  புரியதவனாய் சுற்றித் திரிந்தேன்

                  வறியவன் எனையே அரவணைத்தெடுத்து


Saturday, 9 August 2025

அரங்க நாயகி உடனுறை…..

 பெருந்துயில் வளர் பொன் அரங்கா விழி

மலர்ந்தருள் மணிரங்கா!

செந்திருமகிழ்ந்துறை அந்தரங்காவல்

வினைகளைந்தெனை ஆள் அரங்கா!


அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, தடுத்தாட்கொள்ளும் தயை நிதி அல்லவா?


நமது வேண்டுதலைக் கேட்டு, பள்ளி கொண்ட பெருமாள் முன் நிற்கும் உத்ஸவ ரங்கன் சிரிப்பதாகத் தோன்றுகிறது. அவனருகே ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியர்களும் சிரிக்கின்றனர்.


நமக்குப் பின் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு நகர்ந்தாலும் அரங்கனை மனக்கண்ணில் படம்பிடித்து, நெஞ்சத் திரையில் நிலை நிறுத்திக்கொள்கிறோம். 


அவரை இங்கே விட்டுச் சென்ற விபீஷணனும் அதைத்தான் செய்திருப்பான் போலும்!


ராகம்: 

நாயகி; தாளம்: ஆதி பல்லவி: ரங்கநாயகம் பாவயே ஸ்ரீ ரங்கநாயகி சமேதம் ஸ்ரீ (ரங்க...)


அனுபல்லவி: அங்கஜதாத மனந்தமதீதம் அஜேந்த்ராத்யமரனுதம் ஸததம்

உத்துங்க விஹங்கதுரங்கம் க்ருபாபாங்கம் ரமாந்தரங்கம் ஸ்ரீ (ரங்க...)


சரணம்:


ப்ரணவாகார திவ்யவிமானம் ப்ரஹ்லாதாதி பக்தாபிமானம்

கணபதி ஸமான விஷ்வக்ஸேனம் கஜதுரகபதாதிஸேனம்

தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம் 

மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம்

அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம்

குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் ஸ்ரீ (ரங்க...)


பொருள்: ரங்கநாயகியுடனான ரங்கநாதரை தியானிக்கிறேன். மன்மதனின் தந்தை; ஆதி - அந்தம் அற்றவன், அனைத்தையும் கடந்தவன்; 


பிரமன் மற்றும் இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவன்; கருடனை வாகனமாகக் கொண்டவன்; கருணை நிரம்பிய கண்களையுடையவன்; லக்ஷ்மிக்கு அந்தரங்கமானவன்.


பிரணவாகார விமானத்தை உடையவன். பிரஹலாதன் முதலான பக்தர்களால் வணங்கப்பட்டவன். விநாயகருக்கு ஈடான விஷ்வக்ஸேனரை ஸேனாபதியாய் உடையவன். 


முப்படைகள் உடையவன். சூரிய குலத் தோன்றலான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவன். முக்தியைத் தரவல்லவன். நவரத்தினங்கள் இழைத்த ஆலயத்தில், சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் ஆதிசேஷன் மீது துயில்பவன். 


தாமரைக் கண்ணன். ஒப்பற்ற குணவானான விபீஷணனால் பூஜிக்கப்பட்டவன். கௌஸ்துப மணியை அணிந்துள்ளவன். வேத பாராயணம் செய்யும் குணவான்களின் இறைவன். குருகுஹனுக்கு மகிழ்வூட்டும் ஸ்ரீமன் நாராயணன்.



                              அரங்க நாயகி உடனுறை…..


                                               பல்லவி

               அரங்க நாயகி உடனுறை அரங்கனைத்துதித்தேன்

               ஆதியந்தமில்லாதவனை அனைத்தும் கடந்தவனை 

                                          அனுபல்லவி

                பிரமனிந்திரன்  சுகசனகாதியர் நாரதர் மற்றும்

                நரர் சுரர் வணங்கும்  மன்மதனின் தந்தையை

                                               சரணம்

               கரன் முரனை வதைத்தவனை காகுத்தன் துதித்தவனை

               அரவணை துயில்பவனை கமலக்கண்ணன் கேசவனை

               வீடணனும் மறையோதுமந்தணரும் வணங்கும்

               கருடவாகனனை ஶ்ரீமன் நாராயணனை 

                                   *****

                 पल्लवि

रङ्ग नायकं भावये 
रङ्ग नायकी समेतं श्री

अनुपल्लवि
अङ्गज तातं अनन्तं अतीतं
अज-इन्द्र-आदि-अमर नुतं सततं
उत्तुङ्ग विहङ्ग तुरङ्गं 
कृपा-अपाङ्गं रमा-अन्तरङ्गम्

चरणम्
प्रणव-आकार दिव्य विमानं 
प्रह्लाद-आदि भक्त-अभिमानं
गण पति समान विष्वक्सेनं
गज तुरग पदाति सेनम्
दिन मणि कुल भव राघव-आराधनं
मामक विदेह मुक्ति साधनं
मणि-मय सदनं शशि वदनं
फणि पति शयनं पद्म नयनम्
अगणित सु-गुण गण नत विभीषणं
घन-तर कौस्तुभ मणि विभूषणं
गुणि जन कृत वेद पारायणं
गुरु गुह मुदित नारायणम्