பலவாறு ……
பல்லவி
பலவாறு உனைப் போற்றிப் பாடிவிட்டேன் ஶ்ரீராமா
நலம் தருவாயென மலரடி பணிந்து நான்
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரிந்த மாதவனே
உலகெலாம் கொண்டாடும் உத்தமனே கேசவா
சரணம்
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வனைத்தும்
அளிப்பவன் நீயே அரவிந்த நாபனே
தலங்களுள் சிறந்த அயோத்திமாநகரில்
பால ராமனாய் க்காட்சியளிப்பவனே