தினமொரு அந்தாதி….
பல்லவி
தினமொரு அந்தாதி பாடியுனைத் துதித்தேன்
உனதருள் தருவாயே அன்னை அபிராமியே
அனுபல்லவி
தனக்குவமையில்லாத கேசவன் சோதரி
அனல் புனலணிந்த சிவபெருமான்நாயகி
சரணம்
அனங்கனுக்கருள் செய்த திரிபுரசுந்தரி
வினைப்பயனை மாற்றும் வல்லமை படைத்தவளே
தினகரனைப் பழிக்கும் காந்தியுடையவளே
கனக சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே