தேசீய கீதங்கள்1. பாரத நாடு11.பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி | ||
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும்; எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி; தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்; விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே! வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே! | 1 | |
புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்; வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்! வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்; தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்; அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை! ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே! | 2 | |
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்; பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்; கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்; சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்! நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! | 3 | |
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ? பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப் பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே! என்ன தவங்கள்செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே? இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ? இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே! | 4 | |
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே! விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்; இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே! |
Saturday, 30 May 2015
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
பாண்டுரங்கன்
பாண்டுரங்கன்
பல்லவி
பாண்டுரங்க விட்டலனை மனமாரத்துதித்தேன்
ஆண்டவனவனின்றி வேறே யார் துணை
அனுபல்லவி
வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் கேசவனை
காண்டீபன் ரதம்தன்னை ஓட்டிய மாதவனை
சரணம்
காண்பவர் மனங்கவரும் பேரெழிலழகனை
வேண்டுதல் வேண்டாமை இல்லாத தேவனை
பாண்டவர் நேசனை பண்டரி நாதனை
தீண்டும் அரவணையில் துயிலும் நாரணனை
ஸ்ரீ கணபதி
ஸ்ரீ கணபதி
பல்லவி
ஸ்ரீ கணபதி நீ பரிந்தருள் புரிவாய்
ஆகம வேத புராணங்கள் போற்றும்
அனுபல்லவி
நாகத்தணையான் கேசவன் மருகனே
நாகம் தனை இடையில் அணிந்திருப்பவனே
சரணம்
காகமாய் வந்து காவிரி தந்தவனே
சோகங்களிடர் நீக்கும் கருணாகரனே
பாகம் பிரியாள் பார்வதி மைந்தனே
வேகமே வந்தென் வினைகளைக் களைந்து
Friday, 29 May 2015
சாரநாயகி
சாரநாயகி
பல்லவி
சாரநாயகியை மனமாரத் துதித்தேன்
சாரநாதன் திருமார்பையலங்கரிக்கும்
அனுபல்லவி
பாரெங்கும் புகழ் விளங்கும் காவிரிநதி பாயும்
சீர்மல்கும் திருச்சேறை திருத்தலத்தில் விளங்கும்
சரணம்
நாரதரும் நான்முகனும் சனகாதி முனிவர்களும்
நரர்சுரரும் இந்திரனும் தினம் துதித்துப் போற்றும்
ஆரணங்கை பேரழகைத் திருமகளை நிலமகளை
மாரனையீன்றவளை மகாலக்ஷ்மியை
Thursday, 28 May 2015
அனாத நாதன்
அனாத நாதன்
பல்லவி
அனாத நாதனை ஆனைமுகத்தோனை
வினாடிப் பொழுதும் மறவாமல் துதித்தேன்
அனுபல்லவி
சனாதன தர்ம பரிபாலனனை
வினோத வேழ முகமுடையவனை
சரணம்
கணாதிபதியைக் கேசவன் மருகனை
சுநாத சங்கீதக் கலைகளின் ரசிகனை
பிநாகபாணியின் மகனைக் கரிமுகனை
அநேக முறைகள் வந்தனை புரிந்து
பல்லவி
அனாத நாதனை ஆனைமுகத்தோனை
வினாடிப் பொழுதும் மறவாமல் துதித்தேன்
அனுபல்லவி
சனாதன தர்ம பரிபாலனனை
வினோத வேழ முகமுடையவனை
சரணம்
கணாதிபதியைக் கேசவன் மருகனை
சுநாத சங்கீதக் கலைகளின் ரசிகனை
பிநாகபாணியின் மகனைக் கரிமுகனை
அநேக முறைகள் வந்தனை புரிந்து
Wednesday, 27 May 2015
மாயை
மாயை
***
நீள் கழல் தெரிவதும்
மனத்தினில் அறிவதும்
மெய்யோ பொய்யோ
நிழலோ நிஜமோ
சிற்பரன் இருப்பதும்
தற்பரனாவதும்
பொற்பதமெல்லாம்
கற்பனை தானோ
அற்புத நினைவோ
அற்பக் கனவோ
விற்பனைக்கான
பற்பல கதையோ
நற்பயன் தருமெனில்
மாயையும் சுகமே !
***
நீள் கழல் தெரிவதும்
மனத்தினில் அறிவதும்
மெய்யோ பொய்யோ
நிழலோ நிஜமோ
சிற்பரன் இருப்பதும்
தற்பரனாவதும்
பொற்பதமெல்லாம்
கற்பனை தானோ
அற்புத நினைவோ
அற்பக் கனவோ
விற்பனைக்கான
பற்பல கதையோ
நற்பயன் தருமெனில்
மாயையும் சுகமே !
Tuesday, 26 May 2015
மோதகப்பிரியன்
மோதகப்பிரியன்
பல்லவி
பாதம் பணிந்தேன் பரிந்தருள் புரிவாய்
வேதங்கள் போற்றும் மோதகப் பிரியனே
அனுபல்லவி
யாதவ குல திலகன் கேசவன் மருகனே
மாதயாநிதியே கருணைக் கடலே
சரணம்
ஆதவனை விடவும் ஒளியுடையவனே
நாத சங்கீதக் கலைகளின் ரசிகனே
வேதனை வினை தீர்க்கும் விக்ன விநாயகனே
ஆதரவளித் தெனை ஆண்டருள வேண்டுமென
தாமரையாள் கேள்வன்
தாமரையாள் கேள்வன்
பல்லவி
மாமறைகள் போற்றும் தாமரையாள் கேள்வனை
தேமதுரத் தமிழால் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
பூமகளும் அலைமகளும் திருமகளும் உடனிருக்கும்
தாமரை நாபனை மாதவனைக் கேசவனை
சரணம்
நாமமாயிரமுடையவனை நாரணனை
காமனையீன்றவனை கார்முகில் வண்ணனை
பூமண்டலம் புகழும் பார்த்தன் பள்ளியில்
ஷேமமுடன் வீற்றிருந்து அடியார்க்கு காட்சி தரும்
Monday, 25 May 2015
ஆனந்த கணபதி
ஆனந்த கணபதி
பல்லவி
ஆனந்தமளித்திடும் மகா கணபதியை
தானந்தமில்லாத தேவனைத் துதித்தேன்
அனுபல்லவி
வானுறை தேவரும் நந்தியும் கணங்களும்
மோனத்தவம் செய்யும் முனிவரும் வணங்கிடும்
சரணம்
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கவும்
ஞானமும் செல்வமும் நல்வாழ்வும் பெறவும்
தீனசரண்யனைக் கேசவன் மருகனை
ஆனைமுகத்தோனை மோதகப்பிரியனை
Sunday, 24 May 2015
ஈங்கோயில் சிவன்
ஈங்கோயில் சிவன்
பல்லவி
ஈங்கோயில் சிவனை மனமாரப் பணிந்தேன்
ஓங்கு புகழோடு மலைமீது குடியிருக்கும்
துரிதம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்திரனனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பாங்காக மரகதாம்பிகை உடனிருக்கும்
கங்காதரனை கௌரி மணாளனை
சரணம்
ஓங்கி உலகளந்த கேசவன் நேசனை
நீங்காது கங்கையும் பிறைநிலவும் சூடிய
ஓங்கார நாதனை லிங்கேச்வரனை
தீங்கின்றி எனக்கருள வேண்டுமெனத் துதித்து
பல்லவி
ஈங்கோயில் சிவனை மனமாரப் பணிந்தேன்
ஓங்கு புகழோடு மலைமீது குடியிருக்கும்
துரிதம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்திரனனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பாங்காக மரகதாம்பிகை உடனிருக்கும்
கங்காதரனை கௌரி மணாளனை
சரணம்
ஓங்கி உலகளந்த கேசவன் நேசனை
நீங்காது கங்கையும் பிறைநிலவும் சூடிய
ஓங்கார நாதனை லிங்கேச்வரனை
தீங்கின்றி எனக்கருள வேண்டுமெனத் துதித்து
திருப்பட்டூர் பிரம்மா
திருப்பட்டூர் பிரம்மா
பல்லவி
திருப்பட்டூர் பிரமனை மனமாரத் துதித்தேன்
அருகிருக்கும் ஈசனும் அம்பிகையும் போற்றும்
அனுபல்லவி
திருமால் கேசவன் நாபியிலிருப்பவனை
சரஸ்வதியின் பதியை மறை போற்றும் சதுர்முகனை
சரணம்
விருப்பமுடன் பணியும் பக்தருக்கெல்லாம்
கருணையுடன் தலையெழுத்தை மாற்றித்தரும் நான்முகனை
குருநாரதரும் நந்தியும் தேவரும்
பெருமையுடன் கொண்டாடும் கமலாலயனை
பல்லவி
திருப்பட்டூர் பிரமனை மனமாரத் துதித்தேன்
அருகிருக்கும் ஈசனும் அம்பிகையும் போற்றும்
அனுபல்லவி
திருமால் கேசவன் நாபியிலிருப்பவனை
சரஸ்வதியின் பதியை மறை போற்றும் சதுர்முகனை
சரணம்
விருப்பமுடன் பணியும் பக்தருக்கெல்லாம்
கருணையுடன் தலையெழுத்தை மாற்றித்தரும் நான்முகனை
குருநாரதரும் நந்தியும் தேவரும்
பெருமையுடன் கொண்டாடும் கமலாலயனை
சந்தன விநாயகன்
பல்லவி
சந்தனத்தில் முழுக்காடும் கணபதியைப் பணிந்தேன்
எந்தனைக் காத்தருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
நந்தியும் கணங்களும் நான்முகனும் பணிந்தேத்தும்
இந்தினிளம்பிறை சூடிய கரிமுகனை
சரணம்
வந்தனை புரிந்திடுமடியார்க்கருள்பவனை
கந்த சோதரனைக் கேசவன் மருகனை
அந்தமுமாதியும் இல்லாத தேவனை
சுந்தர வடிவினனை ஆனைமுகத்தோனை
Saturday, 23 May 2015
கண்டேன் அரங்கனை
கண்டேன் அரங்கனை
பல்லவி
கண்டேன் கண்டேன் அரங்கனைக் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன்
அனுபல்லவி
அண்ட சராசரங்களனைத்தையும் ஆள்பவனை
உண்டுலகுமிழ்ந்த கேசவனை மாதவனை
சரணம்
பண்டு கோதையை மணமுடித்த ஸ்ரீதரனை
கண்டவர் மயங்கிடும் பேரழகுடையவனை
விண்ணோரும் மண்ணோரும் வணங்கித்துதித்திடும்
தண்மதி முகத்தானை தாமரை பதத்தானை
காண வேண்டும் அரங்கனை
காண வேண்டும் அரங்கனை
பல்லவி௶
காணவேண்டும் அரங்கனைக்கேசவனை
மாணப்பெரிய கோவிலிலிருப்பவனை
அனுபல்லவி
ஆணழகனை ஆதிபிரானை
நாணும் அரங்கநாயகியின் நாயகனை
சரணம்
சாணுரன் மல்லனை மாய்த்த கண்ணனை
தூணினைப்பிளந்து வந்து இரணியனை வதைத்தவனை
வேணுகானம் செய்யும் முகுந்தனை மாதவனை
தாணுமாலயனாய்க் காட்சி தரும் நாரணனை
சர்வ மங்கள கணபதி
சர்வ மங்கள கணபதி
பல்லவி
சர்வ மங்கள கணபதியைத் துதித்தேன்
தர்ம நெறி தழைக்க தரணியிலவதரித்த
அனுபல்லவி
பர்வத குமாரி உமையாள் மைந்தனை
சிற்பர யோகியர் ஞானியர் வணங்கிடும்
சரணம்
முற்பிறப்பில் செய்த பழவினை பயன்களை
அற்பமாய்ச் செய்து அரவணைத்தெனையே
நற்கதியளித்து காத்திட வேண்டுமென
கற்பக விநாயகனை கேசவன் மருகனை
Thursday, 21 May 2015
சிவன் மகன்
சிவன் மகன்
பல்லவி
சிவன் மகனை கணபதியை மனமாரத் துதித்தேன்
அவனின்றி அவனியில் வேறே யார் துணை
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் மருகனை
தவமுனிவர் சான்றோர் பணிந்திடும் கரிமுகனை
சரணம்
துவங்கும் கருமங்கள் தடையற நடைபெற
அவனியோர் முதன் முதல் வணங்கிடும் ஐங்கரனை
சிவகணங்களும் நவ கோள்களும் நந்தியும்
கவனமுடன் பணிந்தேத்தும் ஆனைமுகத்தோனை
Tuesday, 19 May 2015
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீ ராஜகோபாலன்
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீ ராஜகோபாலன்
பல்லவி
ஸ்ரீ ராஜகோபாலனைக் கேசவனை
மாறாத பக்தியுடன் மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஓராயிரம் நாமம் கொண்ட மாதவனை
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமாவுடன் நிற்கும்
சரணம்
ஆராவமுதனாய்க் குடந்தையில் காட்சி தரும்
சரங்கபாணியை சக்கரக் கையனை
நாராயணனை தெய்வ நாயகனை
பாரோர் புகழ்ந்தேத்தும் காட்டுமன்னார்கோயிலில்
பங்கஜவல்லி
பங்கஜவல்லி
பல்லவி
பங்கஜவல்லியை மனமாரப் பணிந்தேன்
சங்கடம் களைந்து நல்லருள் பெறவே
அனுபல்லவி
பொங்கும் எழில் கொஞ்சும் புண்டரீகாக்ஷனுடன்
மங்களமாய் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியை
சரணம்
பொங்கரவணை துயிலும் கேசவன் துணைவியை
தங்கும் பொருளளிக்கும் திருவென்னும் பெயராளை
திங்கள் முகத்தாளை கடல் தந்த திருமகளை
செங்கமலவல்லியை வெள்ளறை தலத்துறையும்
செல்வகணபதி
செல்வகணபதி
பல்லவி
செல்வகணபதியை மனமாரத் துதித்தேன்
எல்லா தடைகளும் வினைகளும் நீக்கிடும்
அனுபல்லவி
பொல்லாதவரை இல்லாதொழித்து
நல்லவர் மனங்களில் நடம் புரிபவனை
சரணம்
கல்லார் கற்றார் இல்லார் இருப்பார்
எல்லோர்க்குமருள் தரும் கேசவன் மருகனை
தில்லையம்பலவாணன் மகனை
தொல்லை துயர் துடைக்குமானை முகத்தோனை
Monday, 18 May 2015
கங்கணபதி
கங்கணபதி
பல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரன் மகனை
மங்கள மூர்த்தியை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் மருகனை
எங்கும் நிறைந்திருக்கும் ஆனைமுகத்தோனை
சரணம்
அங்குசபாசம் மோதகமேந்திடும்
பங்கய பதத்தானை பானை வயிற்றானை
பொங்கிடும் பவக்கடல் கடந்திட உதவிடும்
கங்கணபதியை கணங்களின் அதிபதியை
Sunday, 17 May 2015
ஆதிதேவன்
ஆதிதேவன்
பல்லவி
அனைத்துக்கும் முதலான ஆதி தேவனை
மகா கணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தினையளவு பக்தியுடன் வணங்கிடுமடியார்க்கும்
பனையளவு நலன்களை அள்ளி அளித்திடும்
சரணம்
முனிவரும் தேவரும் கணங்களும் நந்தியும்
அனைவரும் பணிந்திடும் கேசவன் மருகனை
அநாத நாதனை ஆனைமுகத்தோனை
வினை தீர்ப்பவனை வேழமுகத்தோனை
பராசக்தி
பராசக்தி
பல்லவி
அன்னை பராசக்தியே நீதான் துணை
உன்னை சரணடைந்தேன் காத்தருள்வாய்
அனுபல்லவி
புன்னகை முகத்தாளே கேசவன் சோதரி
பன்னகாபரணன் மனங்கவரீச்வரி
சரணம்
கன்னங்கரிய குழலாளே கரியவளே
சின்னஞ்சிறிய இடையுடையாளே
தன்னந்தனியிருப்பார் துதிக்கும் தவப்பொருளே
முன்னைக்கும் முதலான மூவருக்கும் மூத்தவளே
Saturday, 16 May 2015
மயிலை மாதவப்பெருமாள்
மயிலை மாதவப்பெருமாள்
பல்லவி
மாதவா மதுசூதனா - மயிலை வளர்
பாதம் பணிந்தேன் பரிந்தெனக்கருள்வாய்
அனுபல்லவி
மாதொரு பாகனும் நாரதரும் நான்முகனும்
வேத புராண சாத்திரங்களும் போற்றும்
சரணம்
பாதகம் செய்திடும் அரக்கரை அழித்தவனே
கோதையின் கரம்பிடித்த மாலனே கேசவனே
ஓதக் கடல் நடுவே பள்ளிகொண்டிருப்பவனே
யாதவ குலதிலகா கோவிந்த முகுந்தா
Thursday, 14 May 2015
அரங்கன்
அரங்கன்
பல்லவி
அரங்கனே உன் வாக்கு பொய்யாகலாமோ
பரம்பொருள் நீயென்றே நம்பித்துதித்தேன்
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்
பரமபத நாதனே மாதவா கேசவா
சரணம்
பாரதப் போர் நடுவே கீதையில் ஓதிய
மரணம் பிறப்பெனும் பவச்சுழல் அகன்றிட
கருமங்களனைத்தையும் நீக்கிவிட்டெனையே
சரணடைந்தோரைக் காத்தருள்வேனென்ற
பல்லவி
அரங்கனே உன் வாக்கு பொய்யாகலாமோ
பரம்பொருள் நீயென்றே நம்பித்துதித்தேன்
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்
பரமபத நாதனே மாதவா கேசவா
சரணம்
பாரதப் போர் நடுவே கீதையில் ஓதிய
மரணம் பிறப்பெனும் பவச்சுழல் அகன்றிட
கருமங்களனைத்தையும் நீக்கிவிட்டெனையே
சரணடைந்தோரைக் காத்தருள்வேனென்ற
Monday, 11 May 2015
பார்வதி மைந்தன்
பார்வதி மைந்தன்
பல்லவி
நீதான் எனக்கருள வேண்டும் கணபதியே
மாதா பார்வதியின் மனங்கவர் மைந்தனே
அனுபல்லவி
வேதாகம சாஸ்திர புராணங்கள் போற்றும்
பாதாரவிந்தங்கள் தனையுடைய கரிமுகனே
சரணம்
பூதகணங்களும் நந்தியும் நான்முகனும்
பாதம் பணிந்திடும் ஆனைமுகத்தோனே
ஆதாரம் நீயே அகிலமனைத்திற்கும்
மோதகப் பிரியனே கேசவன் மருகனே
Saturday, 9 May 2015
கமலநாபன்
கமலநாபன் | |
பல்லவி
கமலநாபனைக் கேசவனை - இதய
கமலத்தில் வைத்து அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
கமலக்கண்ணனைக் கருடக் கொடியோனை
கமலவனம் போல் காட்சியளிப்பவனை
சரணம்
கமலவல்லி ஸ்ரீ மகா லக்ஷ்மியை
கமலமலர் மார்பில் வைத்திருக்கும் திருமாலை
கமலபதத்தானை பட்சி வாகனனை
அமலனை ஆதிபிரானை மாயனை
கரிமுகன்
கரிமுகன்
பல்லவி
கணபதியைத் துதித்தேன் பவபயம் களைந்தேன்
பணிந்திடும் பக்தரின் பாவங்கள் போக்கும்
அனுபல்லவி
கணங்களின் தலைவனை கேசவன் மருகனை
தணிகை வளர் குமரன் தமையனைக் கரிமுகனை
சரணம்
மணம் கமழ் மாலைகள் சூடிய சுமுகனை
வணங்கிடுமடியவர் வேண்டும் வரங்களை
கணக்கின்றி வாரி வழங்கிடும் ஐங்கரனை
பிணியிடர் தடைநீக்கும் ஆனைமுகத்தோனை
Friday, 8 May 2015
செல்வவினாயகன்
செல்வவினாயகன்
பல்லவி
செல்வவினாயகனை மனமாரத்துதித்தேன்
அல்லலிடர் களையும் ஆனைமுகத்தோனை
அனுபல்லவி
நல்லடியார்களின் மனக்குறை நீக்கிடும்
வல்லப கணபதியை கேசவன் மருகனை
சரணம்
தில்லை அம்பலத்தாடும் நடராசன் மகனை
வல்லரக்கர் தனை வதைத்த வேழமுகத்தோனை
எல்லோரும் முதல் வணங்கும் தும்பிமுகப்பெருமானை
நல்லருள் பெற வேண்டி அவன் தாள் பணிந்து
பல்லவி
செல்வவினாயகனை மனமாரத்துதித்தேன்
அல்லலிடர் களையும் ஆனைமுகத்தோனை
அனுபல்லவி
நல்லடியார்களின் மனக்குறை நீக்கிடும்
வல்லப கணபதியை கேசவன் மருகனை
சரணம்
தில்லை அம்பலத்தாடும் நடராசன் மகனை
வல்லரக்கர் தனை வதைத்த வேழமுகத்தோனை
எல்லோரும் முதல் வணங்கும் தும்பிமுகப்பெருமானை
நல்லருள் பெற வேண்டி அவன் தாள் பணிந்து
Thursday, 7 May 2015
அய்ங்கரன்
அய்ங்கரன்
பல்லவி
தினமுந்தன் திருவடி மறவாமல் துதித்தேன்
புனிதனே கரிமுகனே மனங்கனிந்தருள்வாய்
அனுபல்லவி
ஜனன மரண பயம் களைந்திடும் தேவனே
அனந்தன் மீதுறங்கும் கேசவன் மருகனே
சரணம்
உனதருள் இல்லையேல் உலகம் இயங்குமோ
அனைத்தும் நீயே ஆனைமுகத்தோனே
வனக்குறத்தி தனை மணக்க முருகனுக்குதவிய
கணபதியே கருணைக் கடலே அய்ங்கரனே
Wednesday, 6 May 2015
நாய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை
***
***
பக்கத்து வீட்டு நாய்
எப்போதும் குறைக்கிறது
பேப்பர்க்காரன் பால்காரன்
பிச்சைக்காரன் வியாபாரி
சலவைக்காரன் கேபிள் டிவி
எதிர்வீட்டு முதியவர் தபால்காரர்
யார் வந்தாலும் போனாலும்
காலையிலும் மாலையிலும்
நேற்று தான் நேரில் சந்தித்தேன்
அந்த பக்கத்து வீட்டுக்காரரை
நம்பவே முடியவில்லை அவர் வீட்டில்
நாய் வளர்க்கவில்லை என்று சொன்னதை ........
Tuesday, 5 May 2015
கலைவாணி
கலைவாணி
புத்தகமும் வீணையும் கரங்களில் ஏந்தி
நித்தமும் ஞானமும் கல்வியும் அளித்திடும்
உத்தமியே வெண் கலையுடுத்திய கலைவாணி
முத்தமிழும் தந்தெனையே காத்தருள வேண்டுமென
சித்தத்திலிருத்தி பக்தியுடன் தினம் துதித்தேன்
காரமர் மேனியன்
காரமர் மேனியன்
பல்லவி
காரமர் மேனியனை மகா கணபதியை
நேரினில் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கூரிய வேலேந்தும் குமரன் சோதரனை
கோரின வரம் தரும் கேசவன் மருகனை
சரணம்
நாரணன் நான்முகன் நமச்சிவாயன்
நாரதர் நந்தி கணங்கள் பணிந்தேத்தும்
வாரணமுகனை மோதகப் பிரியனை
பாரனைத்தும் போற்றும் பரம தயாளனை
மழை
மழை
***
அழைக்காமலே வருவாய்
அழைத்தாலும் பொழியாய்
தாகம் தீர்ப்பாய்
வேகம் பெருகி உயிரெடுப்பாய்
பயிர் பெருக உதவிடுவாய்
குடைக்குள் காதல் வளர்ப்பாய்
இடைவிடாது பொழிந்து இடைஞ்சலாவாய்
காலத்தில் பெய்து களிப்புறச்செய்வாய்
காலம் தவறிப் பெய்து காலனாவாய்
உன் குணம் அறிவதரிது
இடும்பைகூர் மழையே
Friday, 1 May 2015
ஈசன் சிவன் மகன்
ஈசன் சிவன் மகன்
பல்லவி
ஈசன் சிவன் மகனை மகாகணபதியை
வாசமலர் தூவி மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
நீச அரக்கரை வதம் செய்த கரிமுகனை
கேசவன் மருகனை ஆனைமுகத்தோனை
சரணம்
நேசமுடன் துதிக்கும் பக்தருக்கெல்லாம்
ஆசையுடன் அருள் அளித்திடும் ஐங்கரனை
மாசிலாமணியை வாரண முகனை
காசினி புகழ்ந்தேத்தும் விக்ன விநாயகனை
Subscribe to:
Posts (Atom)